Kal Bhairav Idol, Kaal Bhairav Idol, Kala Bairava Idol, Kala Bairavar Statue, Kaal Bhairav Murti, Kaal Bhairav Murti Brass, Kalabhairava Idol, Kalabhairava Idol Brass, கால பைரவர் சிலை.

அறிமுக சலுகை : அழகிய கால பைரவர் சிலையுடன் 2×2 இன்ச் குபேர யந்திரம் இலவசம்!

Kalabhairava Idol Brass Specifications – Weight : 570g, Height : 16cm, Length : 7cm, Width : 5.5cm, Metal : Brass.

ஆலயம் செல்வீரின் இந்த அழகிய கலை அம்சம் மிகுந்த பித்தளை கால பைரவர் சிலை வேலைப்பாடுகளோடு மிக கவனத்தோடும், நேர்த்தியுடனும் செய்யப்பட்ட ஒரு கலை பொக்கிஷமாகும். வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களில் இந்த கால பைரவர் சிலை எளிதில் வைத்து பூஜை செய்யலாம். கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர், ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்கள், காலம் என அனைத்தையும் கட்டுப்படுத்துபவராக கூறப்படுகிறார். தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு

உகந்ததாக கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. அபிசேகப்பிரியான சிவபெருமானின் அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்ததாக கூறப்படுகிறது. அதனுடன் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்திற்கு பயன்படுத்தலாம். பைரவ விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்புவாய்ந்ததாகும் பைரவ மூர்த்தி விரதத்தினை தொடர்ந்து இருபத்து ஒரு முறை இருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. வீட்டிலேயே பைரவர் பூஜை செய்வதற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலம் சிறந்த நேரமாக இருக்கிறது. இந்த சமயத்தில் பூஜையறையில் காலபைரவ திருஉருவ விக்கிரகத்திற்கு மஞ்சள், சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து, மலர்களை சமர்ப்பித்து, நெய்தீபங்கள் ஏற்றி, கேசரி, சர்க்கரை பொங்கல் போன்ற ஏதேனும் ஒரு இனிப்பான உணவை நைவேத்தியமாக வைத்து பைரவருக்குரிய மந்திரங்களை துதித்து வழிபட்ட பின்பு, பைரவருக்கு ஆரத்தி எடுத்து பூஜையை முடிக்க வேண்டும்.

வீட்டிலேயே செய்யப்படும் இந்த பைரவர் பூஜையை குறைந்தது 8 சனி அல்லது ஞாயிறு ராகு காலங்களில் செய்வது சிறந்த பலன்களை தரும். எட்டாவது முறையாக செய்யப்படும் பைரவர் பூஜை அன்று, பூஜை முடிந்த பின்பு நம்மால் முடிந்தவரை பசியால் வாடும் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்குவது நமக்கு சிறப்பை சேர்க்கும். அன்னதானம் வழங்க இயலாதோர் தங்களால் முடித்த உதவியை ஏழைகளுக்கு செய்யலாம். தேய்பிறை அஷ்டமி தினங்களில் கருப்பு நிற நாய்களுக்கு உணவு வழங்குவதால் உங்களை பீடித்திருக்கும் கிரக தோஷங்கள் மற்றும் பிறவி சாபங்கள் அனைத்தையும் நீக்கி அருள்புரிகிறார் பைரவ மூர்த்தி. முறைப்படி பைரவ பூஜை செய்து வருபவர்களுக்கு கிரக தோஷங்கள் நீங்கும். வீட்டிலிருக்கும் தரித்திர நிலை மாரி செல்வ சேர்க்கை உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான வழக்குகளில் நியாயம் உங்கள் பக்கம் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும். விபத்துகள், அகால மரணம் போன்ற துர்வினைகள் நீங்கும். கொடிய நோய்கள் நீங்கும். துஷ்ட சக்திகள் மற்றும் செய்வினை பாதிப்புகள் ஒழியும்.

Aalayam Selveer’s premium qulaity, super fine Antique Finish Small Brass Kaal Bhairav Idol(Kal Bhairav Idol/Kaal Bhairav Murti/Kala Bairavar Statue/Kalabhairava Idol).Kaal Bhairav Murti is made of high quality solid Brass with micro level detailing and an antique finish. Kala Bairavar Statue displays exquisite workmanship, Kala Bhairava is a powerful manifestation, or avatar of Lord Shiva and this beautiful Kaal Bhairav Idol can be placed in home, office, factory, shop or in the puja room. This Kalabhairava Idol Brass is an excellent divine gift to your loved ones.

• Kaal Bhairav Idol is Artistic, Handmade, Handcrafted, Antique Finish.
• Kala Bairava Idol is Made of high quality solid Brass with micro level detailing.
• Kalabhairava Idol Brass Specifications – Weight : 570g, Height : 16cm, Length : 7cm, Width : 5.5cm, Metal : Brass.
• Kala Bairavar Statue is an excellent gift to your loved ones.
• Kaal Bhairav Idol(Kal Bhairav Idol/Kaal Bhairav Murti/Kala Bairavar Statue/Kalabhairava Idol) Can be placed in the home, office, factory, shop or in the puja room.

Weight 570 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.