Small Varahi Statue, Varahi Amman Brass Statue, Varahi Amman Silai, Varahi Amman Silai Price, Varahi Statue Low Price, Varahi Amman Statue For Sale, Varahi Amman Statue Price,Varahi Amman Statue Online Shopping, Varahi Amman Statue in Amazon.

அறிமுக சலுகை : வராகி அம்மன் சிலையுடன் 2x 2 இன்ச் வராகி அம்மன் யந்திரம் இலவசம்!

Varahi Amman Silai : Weight : 540g, Height : 9cm , Width : 9cm, Metal : Brass.

ஆலயம் செல்வீரின் இந்த கலை அம்சம் மிகுந்த வராகி அம்மன் சிலை கைவேலைப்பாடுகளோடு மிக கவனத்தோடும், நேர்த்தியுடனும் செய்யப்பட்ட ஒரு கலை பொக்கிஷமாகும்

தன்னை நம்பிய பக்தர்களுக்கு துளிகூட தீவினை அண்டாது காக்கும் வெற்றி தேவதை வாராகி அம்மன். அம்பிகையிடம் இருந்து தோன்றிய சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வாராகி அம்மன். சக்திகளிலே சாந்த சொரூபமும் உண்டு, உக்ர சொரூபமும் உண்டு. பக்தர்கள் பூஜை செய்யும் போது சாந்த கோலம் கொண்ட புன்சிரிப்போடு திகழ்கிறாள் இந்த அன்னை. வீட்டிலேயே இவளின் திருவுருவப் படம்/சிலை வைத்து வழிபாடு செய்யலாம். பக்தர்களை சத்ருக்கள் சோதிக்கும் போது கோபம் கொண்டு அசுரனை வதம் செய்ய உக்ர நிலையை அடைகிறாள், ஆதி பராசக்தி வடிவங்களில் உயர்ந்த வடிவம். தோல்வியை துரத்தி எளிதில் வெற்றி கொடுக்கும் வடிவம்தான் இந்த வாராகி. ஏழு லோகங்களின் காவல் படைத்தலைவி, தன்னை நம்பிய பக்தர்களுக்கு துளிகூட தீவினை அண்டாது காக்கும் வெற்றி தேவதை அவள். பைரவ சுவாமியின் சக்தியாக இருப்பதால்,வராகி உபாசனை அல்லது வராகி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக யாராவது பில்லி சூனியம் வைத்தால் வைத்தவர்களுக்கு பலவிதமான சிரமங்கள் உருவாகும். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். வாராகி அம்மன் ஸ்ரீ புவனேஸ்வரியின் படைத்தலைவி. அவளின் எதிரிகளை பொடிபொடியாக்கும் பைரவியும் வாராகியே.

வாராகி அம்மனை வணங்கும் முறை என்ன?

பூஜை அறையில் வாராகி அம்மனின் திருவுருவப் படம்/சிலை முன் விளக்கேற்றி தினமும் இரவு 8 மணி முதல் 10 மணிக்குள் வாராகி அம்மனை வணங்கி வரலாம். இரவு நேரத்தில் பூஜை செய்ய இயலாதவர்கள் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் கூட செய்யலாம். வாராகி அம்மன் வழிபாட்டை புதிதாக தொடங்கும் அன்பர்கள் அன்னை பிறந்த திதியான வளர்பிறை பஞ்சமி அன்று வழிபாட்டினை ஆரம்பிப்பது மிக சிறப்பு.

கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து 108 முறை வாராகி அம்மனின் காயத்ரி மந்திரம் அல்லது வாராகி அம்மனின் மூல மந்திரத்தை நாம் அன்னையை மனதார வேண்டி ஜெபிக்கலாம். இந்த பதிவின் முடிவில் கொடுக்க பட்டுள்ள வராகி மாலை பாடலை பாடியும் வழிபடலாம்.

இந்த வழிபாட்டு முறையினை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வர நாம் நினைத்த காரியத்தை நிச்சயம் நிறைவேற்றி அருள் புரிவாள் அன்னை. பெண்கள் மாத விலக்கின் போது 4 to 5 நாட்கள் இடை வெளி விட்டு விட்டு பின்னர் விட்ட இடத்தில இருந்து வழிபாட்டினை தொடரலாம்.

வாராகி அம்மனின் அருள் பெற நாம பின்பற்ற வேண்டிய நெறிமுறை என்ன?

1. வாராகி அன்னை தூய்மையான அன்புக்கு, பக்திக்கு வசப்படுபவள், தன் பக்தனை எந்த நொடியிலும் காத்தருளும் மனோபாவம் கொண்டவள். இப்படி தன் பக்தனையே எந்நேரமும் காத்து அருளும் தேவி அமர ஒரு தூய்மையான இடம் தேவை. இடம் என்றால் மாடமாளிகையோ, அலங்கார தோரணையோ தேவை இல்லை. அவள் தூய்மையாக இருக்க வேண்டும் என எண்ணுவது தன் பக்தனின் மனதை மட்டும் தான். அது போதும் அவள் வந்து அமர்ந்து அருள்புரிய.

2. வாராகியை வழிபட நினைப்பவர்கள் எக்காரணம் கொண்டும் மற்றவர்களை தூற்றவோ சபிக்கவோ கூடாது. அது உங்கள் வலிமையை குறைக்கும்.

3. எனக்கு இது வேண்டும் தாயே கொடு என கேட்கலாம். ஆனால் வேறொருவரை கெடு என்று இந்த தேவியிடம் வேண்டக்கூடாது. ஏனெனில் கண்ணிமைபோல் காக்கும் அன்னைக்கு நம் சத்ருபத்தி தெரியாமலா போய்விடும். நமக்கு தீங்கு செய்பவர்களை அவள் பார்த்து கொள்வாள்.

4. வாராகி அருள் நமக்கு இருக்கிறது என்ற கர்வமும், அதனால் மற்றவர்களிடம் தன்னை பற்றி பெருமித பேச்சு இருக்கவே கூடாது.

5. வாராகி நமக்கு முன்கூட்டியே நிகழ்வுகளை எண்ணவடிவாக சொல்லி எச்சரிப்பாள். அதை உள்வாங்கும் மனதூய்மை நமக்கு என்றும் வேண்டும்.

6. மற்றவர்களுக்காக உங்கள் பிரார்த்தனை அன்னையிடம் அமைந்தால் இது மிகப்பெரிய வலிமை. அன்னை உடனடியாக நம் ஆசையை நிறைவேற்றுபவள்.

7. வாராகி அன்னை அருளை பெற முக்கிய விதி புறம்பேச கூடாது. மற்றவர் படும் துயரம் கண்டு நாம் அதில் குளிர்காய கூடாது. இந்த தீய எண்ணம் இருந்தால் அன்னை அருள் நம்மை என்றைக்கும் நெருங்காது. ஆயிரம் மந்திரங்கள் லட்ச எந்திரமும் வைத்திருந்தாலும் அன்னை பார்வை நம்மீது படாது.

8. நம் மனத்தில் பொய், வஞ்சம், இதெல்லாம் இருக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் வாராகி அதில் அதில் உடனே அமர்ந்து அருள்புரிவாள்.

9. நெறி எனும் முக்கிய விதியை யார் கடைபிடிக்கின்றார்களோ. அவர்களிடத்தில் பிரியம் கொண்டு அன்போடு அருளாட்சி செய்பவள் தான் இந்த வாராகி அன்னை. என்றைக்கும் ஒவ்வொருவர் எண்ணங்கள் பார்த்து வருபவள் தான் இவள். நன்மை எனில் நல வாழ்வும், அதர்மம் எனில் தண்டனை வாழ்வும் வழங்குபவள்.

வாராகி அம்மன் வழிபாட்டு பயன்கள் என்ன?

நமக்கு எப்போதெல்லாம் துன்பம் அல்லது நம்முடைய வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு சென்று போக முடியாத சூழல் ஏற்படும்போது நாம் இந்த வாராஹி வழிபாடு செய்வதன் மூலமாக அம்மன் நம்முடைய வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவுவாள்.

வாராகி வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. வாராகியைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால், எடுத்த காரியம் யாவும் வீரியமாகும். காரியம் அனைத்தும் வெற்றியைத் தரும். எதிர்ப்புகள் அனைத்தும் விலகிவிடும். காரியத்தில் இருந்த தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும் என்பது ஐதீகம்! வாராகி வழிபாடு செய்பவர்களை கெட்ட சக்தி என்றைக்குமே நெறுங்காது. வாராகியை சரணடைந்தால் நாம் அனைத்து தொல்லைகளிலிருந்தும் விரைவில் விடுபடலாம்.

வாராகி தேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். காரியம் யாவிலும் துணையிருப்பாள். செயலில் பலமும் பலனும் தந்தருள்வாள் என்பது ஐதீகம். வாராகி அன்னை கூப்பிட்ட குரலுக்கு வந்து நமக்கு உதவுவாள்.

Aalayam Selveer’s artistic, handmade, handcrafted Varahi Amman Statue(Varahi Goddess Statue) is made of high quality solid Brass with micro level detailing and an antique finish. Varahi Amman Statue(Varahi Amman Silai/Varahi Amman Brass Statue/Varahi Goddess Statue) can be placed in home, office, factory, shop or in the puja room.

Varahi Amman(Varahi Goddess) is the 5th among the Saptha Mathas, she is a symbol of purity, peace and prosperity. She emerged from the Angusam of Devi Sri Lalitha Parameshwari. She is the commander of the battalion of Sri Raja Rajeshwari. Her Position is at 16th corridor (Pragaram) in Sri Chakra. Goddess Varahi worship gives relief from troubles and obstacles, eliminates evil eyes, blesses with courage and strength and disples fear, protects from economic losses, bestow abundance of wealth, stability and safety. Dispels fear and grants victory over enemies.

Goddess Varahi Statue is an excellent gift to your loVed ones (Diwali gifts, Diwali Puja Gifts, Housewarming Gifts, Spiritual Lucky Gift, Fengshui Gift, Thanksgiving Gift, Anniversary Gift, Birthday Gift, Wedding Gift).

Weight 540 g

1 review for Varahi Amman Brass Statue + Free Varahi Yantra(2×2)

  1. Subashini (verified owner)

    I’m really satisfied with the varahi statue.It was excellent & I’m feeling so happy!😃 Thank you so much 🙏🏻

    • Aalayam Selveer

      Thank you so much sister

Only logged in customers who have purchased this product may leave a review.