Devadaru Malai, Devadaru Malai Benefits in Tamil, Devadaru Malai 10mm, Devadaru Malai Benefits, Devadaru Mala, CedarWood Mala, தேவதாரு மாலை.

Devadaru Malai – Natural Finish – No Artificial Colour – Original Wood Colour – 100 % pure beads of Indian Cedar Wood.

108 Beads Karungali Mala, Bead Size – 10mm, Weight : 70g Height – 19.5 Inches.

புனிதமான தேவதாரு மரம்:

 புனிதமான இந்திய சிடார் மரம் / தேவதாரு மரம் செட்ரஸ் தியோதரா என்ற மரவகையை குறிக்கும் சமஸ்கிருத வார்த்தையாகும், தேவதாரு என்ற சமஸ்கிருத வார்த்தையில் உள்ள “தேவா” என்ற வார்த்தை தெய்வீக/கடவுள் என்பதையும் “தரு” என்ற வார்த்தை  மரம் என்பதையும் குறிக்கின்றது, எனவே தான் தேவதாரு மரம் “கடவுளின் மரம்” என்று அழைக்கப்படுகின்றது. தேவதாரு மரம் பண்டைய வேத காலங்களிலிருந்து இன்றுவரை இந்துக்களிடையே தெய்வீக மரமாக வணங்கப்படுகிறது,  இது தொடர்பான பல புராணக்கதைகள் உள்ளன. தேவதாரு மரம் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் காரிய சித்தி, அதிகாரம், தலைமை பண்பு, சக்தி, தைரியம், வெற்றி, அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு மற்றும் நல்ல உடல் அரோக்கியத்தையும் தருகிறது, தேவதாரு இருக்கும் வீடு லட்சுமி தேவி குடி இருக்கும் இருப்பிடமாகிறது. இந்த தெய்வீக மரம் சுற்றுப்புறத்தை சுத்திகரிப்பு செய்யும் பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது, இது மூலிகை தூப் பொடிகள் மற்றும் தூபங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. தேவதாரு பல நூற்றாண்டுகளாக நம் பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேத/சித்த மருத்துவத்தில் அதன் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும், அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. தேவதாரு மரம் மற்றும் அதன் இலைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் இருமல், சளி, தோல் நோய்த்தொற்றுகள் மற்றும் மூட்டுவலி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

தேவதாரு மாலை பயன்கள்:

தேவதாரு மாலை புனிதமானதாகக் கருதப்படுகிறது,  இது பிரபஞ்சதில் உள்ள நேர்மறையான சக்திகளை ஆகர்ஷணம் செய்து தன்னுள் சேமித்து வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. தேவதாரு மரத்தின் மையப் பகுதியை வட்ட வடிவ மணிகளாகச் செய்து, செப்புக் கம்பி அல்லது பருத்தி நூலைப் பயன்படுத்தி மாலையாக  செய்யப்படுகிறது. தேவதாரு மாலையை அணிந்து பயன்படுத்துவதால் காரிய சித்தி, அதிகாரம், தலைமை பண்பு, சக்தி, தைரியம், வெற்றி, அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு மற்றும் நல்ல உடல் அரோக்கியத்தையும்  தருகின்றது. தேவதாரு மாலை சூரிய தோஷதின் தாக்கத்தையும் குறைக்க உதவுகிறது, மேலும் வலிமை மற்றும் தைரியம் இல்லாமை, தன்னம்பிக்கை இல்லாமை, சுயமரியாதை இல்லாமை, ஊக்கமின்மை மற்றும் முயற்சியின்மையை  நீக்குகிறது, ஆற்றல் சக்திகளை உயர்த்தி, கண்பார்வையை மேம்படுத்துகிறது. ஆண் பெண் இருபாலரும் தேவதாரு மாலை அணியலாம். இந்த தேவதாரு மாலையை கொண்டு தியானம் செய்யலாம், மந்திரங்கள் ஜெபிக்கலாம், கடவுள் சிலைகளுக்கு மாலையாகவும் அணிவிக்கலாம்.

தேவதாரு மாலை அணியும் முறை:

தேவதாரு மாலையை முதலில் பாலில் ஒருமுறை கழுவி விட்டு பின்னர் சுத்தமான நீரில் கழுவிவிட்டு, நல்ல நேரத்தில் குலதெய்வம்/இஷ்ட தெய்வத்தை பூஜை செய்து வேண்டி வணங்கி அணிந்து கொள்ளலாம்.

தேவதாரு மாலையை யாரெல்லாம் அணியலாம்:

இதை அனைத்து ராசிக்காரர்களும் அணியலாம், ஆண்கள், பெண்கள் இருபாலரும் அணியலாம். எப்படி பெண்கள் கடவுள் உருவம் பொறித்த தங்களுடைய தாலிக்கொடியை எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் அணிந்திருப்பதைப் போல, ருத்ராட்சம், கருங்காலி, தேவதாரு, ஸ்படிகம் போன்றவற்றையும் அனைத்து நேரங்களிலும் அணிந்து கொள்ளலாம். இயற்கையாக நடக்கும் எந்த நிகழ்வின் போதும் நாம் ருத்ராட்சம், கருங்காலி, தேவதாரு, ஸ்படிகம் அணிந்திருப்பது தவறில்லை. சிவாலங்களில் தினமும் பள்ளி எழுச்சி நடப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதாவது இரவில் சிவனும் அம்பாளும் ஒரு ஊஞ்சலில் ஒன்றாக இருப்பதைப் பார்க்க முடியும். பின்னர் மீண்டும் காலையில் சிவனையும், அம்பாளையும் அவரவர் இடத்திற்கு கொண்டு சென்று வைத்துவிடுவார்கள். அதன் காரணம் சிவனும் அம்பாளும் சேர்ந்து இருப்பதாக அர்த்தம் அப்போது கூட சிவ பெருமான் ருத்ராட்சத்தை அணிந்திருப்பார். அதனால் நாமும் எப்போதும் அணிந்திருப்பது தவறில்லை. எனவே திருமணம் ஆனவர்கள் அணிந்திருந்தாலும் தவறில்லை.

 பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்பு:

குளிப்பதற்கு ரசாயனங்கள் கொண்ட சோப்பு மற்றும் ஷாம்பு உபயோகிப்பதால் நாம் குளிக்கும் போது தேவதாரு மாலை, கருங்காலி/பிரேஸ்லெட், ஸ்படிகம் மாலை, தாமரை மணி மாலை, ருத்திராட்ச மாலை போன்றவற்றை அணியக்கூடாது, கழட்டி வைத்து விட்டு குளித்த பின்னர் அணிந்து கொள்ளவேண்டும். நூலில் கோர்க்கப்பட்டது என்பதால் தூங்கும் போது கழட்டிவிட வேண்டும், வெள்ளி/செப்பு கம்பியில் கோர்த்து கொண்டால் தூங்கும் போதும் அணியலாம்.

தேவதாரு மாலையை எப்போது அணியக்கூடாது?

அசைவ உணவு உட்கொள்ளும்போது அணியக்கூடாது, அசைவ உணவு உண்ட பின்னர் 8 முதல் 10 மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து விட்டு மீண்டும் மாலையை அணிந்து கொள்ளலாம், அதே போல் இறப்பு/ஈமச்சடங்கு கலந்து கொள்ளும் போது அணியக்கூடாது, வீட்டிற்கு வந்து தலைக்கு  குளித்து விட்டு மீண்டும் மாலையை அணிந்து கொள்ளலாம்.

Weight 70 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.